Thirukkolur pen pillai ragasiyam
When Sri Ramanuja visited Thirukkolur, a girl who was selling curd was leaving the place. Sri Ramanuja asked the girl in astonishment that when people go any extent to visit Thirukkolur ,why she was leaving? The girl replied with utmost humility that she is not worthy enough to stay in Thirukkolur in 81 statements which highlights the key aspects of Sri Vaishnava sampradhayam .
- அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
- அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
- தேஹத்தை விட்டேனோ ரிஷிப் பத்நியைப் போலே
- தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
- பிணம் எழுப்பிவிட்டேனோ தொண்டைமானைப் போலே
- பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
- தாய்க்கோலஞ் செய்தேனோ அனுஸுயைப் போலே
- தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
- மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
- முதலடியையைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
- பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே
- எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே
- ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார்ப் போலே
- நான் (அவன்) சிரியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
- ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே
- யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணணைப் போலே
- அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே
- அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையயைப் போலே
- அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
- அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே
- தேவி மாற்றஅறியேன் மதுரகவியைப் போலே
- தெய்வத்தை பெற்றேனோ தேவகியார் போலே
- ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
- ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
- அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
- அவல் பொரியை ஈந்தேனோ குசலரைப் போலே
- ஆயுதங்களை ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
- அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே
- கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே
- கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே
- குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான்ப் போலே
- தொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே
- இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே
- இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
- இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
- இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
- அவன் உரைக்க பெற்றேனோ திருக்கச்சியார்ப் போலே
- அவன் மேனி ஆனேனோ திருப்பானர் போலே
- அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே
- ஆடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே
- மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே
- மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே
- பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே \
- பூவைக் கொடுத்தேனோ மாலைக்காரரைப் போலே
- வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
- வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
- அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமானைப் போலே
- அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே
- இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே
- இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே
- இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
- இங்கு இல்லை என்றேனோ ததிப்பாண்டனைப் போலே
- காட்டுக்கு போனேனோ பெருமாளைப் போலே
- கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே
- இரு கையும் விட்டேனோ த்ரௌபதியை போலே
- இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
- இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே
- நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
- நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
- அவன் போனான் என்றேனோ மாறுதியாண்டானைப் போலே
- அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே
- அத்வைதம் வென்றேனோ எம்பெருமானரைப் போலே
- அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே
- அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
- ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே
- அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே
- அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
- கள்வன் இவன் என்றேனோ லோககுருவைப் போலே
- கடோலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே
- சுற்றி கிடந்தேனோ மாலையாண்டானைப் போலே
- சூளரவு கொண்டேனோ கோட்டியூராரைப் போலே
- உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
- உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே
- என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே
- யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே
- நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே
- நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே
- வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே
- வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
- தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
- துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே

Comments