Namma Veetu Kalyanam

ஏண்டி  யம்மா  என்ன  பண்ணின்டுருக்கே? ஆத்துலதான்  இருக்கியா ? சத்தமே காணோம்.


இது  பக்கத்தாத்து  அம்புஜம்  மாமி.


Royal Wedding பாத்துண்டு இருக்கேன்  மாமி. Prince Williams -  Kate க்கும்  கல்யாணம்...நீங்க பார்க்கலையா?


ஏண்டி யம்மா...ஒரு  பையனை   கப்பல்ல  கவிழ்த்தினது பத்தாதா. 
இப்போ  இன்னொருத்தொனோட  வாழ்க்கைய எதுக்கு  பாழ்  பண்றா, இந்த பொண்ணு. அந்த  படத்த பார்த்து  நான்  எங்க  ஆத்துகாரோட தோள்ள சாஞ்சு  எவ்ளோ  நேரம்  அழுதேன்  தெரியுமா?


ஐயோ  மாமி அது  Titanic Kate Winslet, இது Kate middleton. ஓவரா  feel பண்ணாதேள்!


என்னதுடி எல்லா  லேடீசும்  இப்படி  வந்துருக்கா .. ஒரு நகை  உண்டா நட்டு உண்டா, தொப்பி மாட்டிண்டு சொக்கா போட்டுண்டு  வந்துருக்கா.


மாமி அது அவா கலாச்சாரம்... கௌனும் தொப்பியும் தான் முக்கியம், 
நம்ம side மாதிரி சவரன்  சவரனா  நகை புடவை  தேவை  இல்லை .


என்னமோ  போ. போட்டுண்டு  இருக்குற  தொப்பிய பத்தி  என்ன கதை பேச  முடியும்  அவளால... 
ரொம்ப பாவம். பட்டுலயாவது  மொழ  ஜரிகை   வச்சு  gown தெச்சுண்டு  இருக்கலாம்.


மாமி அப்புறம்  நீங்க பாவ  படலாம், அதோ  பாருங்க  david beckham ,victoria beckham, sultan of brunei எல்லாம்  வரா.


பொண்ணு  ஆத்து  மனுஷா  எங்க ? வரவாள வாங்கோன்னு கூப்பிட வேணாம்?


எல்லாரும்  வந்த  அப்புறம் hotel லேந்து  கார்ல  வருவா escort ஓட.


இப்படியும் இருக்குமா. வரவாள வரவேற்க்க பொண்ணு ஆத்துக்காரா மொதல்ல இருக்க வேண்டாம்? ராணி எப்படி  இப்படி  விட்டா? நான்  பக்கத்துல  இருந்தேன் சொல்லிக்கொடுதுருப்பேன்.


ஆமா  ஆமா  நீங்க சொல்றத தான் ராணி கேட்டு நடப்பா மாமி. 
அதோ வரா பாருங்கோ பொண்ணோட  அம்மாவும்  தம்பியும்.


அம்மாவா  அது  மாப்பிளைக்கு  அக்கா மாதிரி  இருக்காளே. அடுத்த ஜன்மத்ல நான் வெள்ளைக்காரியா  தான் பொறக்கணும். 
இப்படி உப்பு  சப்பு இல்லாத  கல்யாணமா இருக்கே. நான்  கெளம்பறேன்.இன்னும்  கொஞ்சம்  நாழில  serial ஆரம்பிச்சுடும் அதுக்குள்ள  night tiffin ரெடி பண்ணனும். மாமா கோச்சிப்பார். ஆமா எதுக்கு  எல்லாரும் கூட்டம்  கூட்டமா  கூடி   அவா  palace முன்னாடி  நிக்கறா?


இனிமே தான் நீங்க கேட்ட உப்பு சப்பு எல்லாம் மாமி.
இப்போ பாருங்கோ ரெண்டு பேரும் எல்லார் முன்னாடியும் 'உம்மா'  கொடுத்துப்பா.


அட  பகவானே. என்னடி  சொல்ற? உம்மா கொடுதுப்பாளா? 
அதை  நீ   வேற  நடு ஹால்ல பசங்களோட  உக்காந்து  பார்த்துண்டு  இருக்க. 

கலி  முத்திடுத்து .


சரி வந்தது  வந்துட்டேன்,நானும்  பார்த்துட்டே போறேன் .!!




Comments

Hari said…
LIKE !!! :)

Innum konjam detaileda iruntha "nannna" irunthirukkum Maami...
VPP said…
@Hari: Thanks da ambi, ezhudhidalam !!
Partha said…
Romba nanna irukku. Btw pangajam maami wait pannadhukkaga anniki 2 umma kuduthundaalame.
VPP said…
@Partha: Ayyo adhu pankajam maami illai, ambujam maami!!
Partha said…
Eadho oru "jam" maami. Matter dhaan mukiyam. Indha kalai sevaiya ambujam panna enna pangajam panna enna?
VPP said…
@partha: kalai sevai thodarum....no doubt about it ;p :)

Most read

Zen O Zen - Part 1

Ten day YOU challenge- Post 5. Six places

Terima Kasih Bali - Akkarai seemai azhaginile - Part -2